விளையாட்டு

ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை – ஆஸ்திரேலிய அணியிடம்

(UTV|AUSTRALIA)-37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனும், உலக சாம்பியனுமான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் லாச்லன் ஷார்ப் (ஆஸ்திரேலியா), 10-வது நிமிடத்தில் வருண்குமார் (இந்தியா)15-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கிரேக் டாம் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்டென் டிரென்ட் கோல் அடித்தார். அதன்பின் 58-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இது ஆஸ்திரேலிய அணி பெற்ற 2-வது வெற்றியாகும்.

இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கொரோனா – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உயிரிழப்பு

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்.

சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் காயமடைந்துள்ளார்