சூடான செய்திகள் 1

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 13ம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முறைப்பாட்டை விசாரிக்கும் அரசின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே வௌிநாடு சென்றுள்ளதால் இந்த வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக சாட்சியாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் காணி ஒன்றில் உள்ள அனுமதியற்ற குடியிருப்பாளர்களை நீக்கிவிட்டு அந்த இடத்தை வழங்குவதற்காக ஜெராட் மெண்டிஸ் எனும் வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபா நிதி கேட்டு அச்சுறுத்தியதாக மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான நரேஷ் பாரிக் என்பவர் தற்போது வௌிநாட்டில் இருப்பதால் அவர் இன்றி இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ல் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 13ம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முறைப்பாட்டை விசாரிக்கும் அரசின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே வௌிநாடு சென்றுள்ளதால் இந்த வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக சாட்சியாளர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் காணி ஒன்றில் உள்ள அனுமதியற்ற குடியிருப்பாளர்களை நீக்கிவிட்டு அந்த இடத்தை வழங்குவதற்காக ஜெராட் மெண்டிஸ் எனும் வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபா நிதி கேட்டு அச்சுறுத்தியதாக மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான நரேஷ் பாரிக் என்பவர் தற்போது வௌிநாட்டில் இருப்பதால் அவர் இன்றி இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நுகர்வோர் சட்டங்களை மீறிய 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

இலங்கையில் மூன்றாவது மரணமும் பதிவு