சூடான செய்திகள் 1

58ஆவது தடவையாக பொலன்னறுவையில் பொசொன் அன்னதான நிகழ்வு

(UTV|COLOMBO)-பொலன்னறுவை பௌத்த சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 58ஆவது தடவையாக நடைபெறும் பொசொன் அன்னதான நிகழ்வை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.

அன்னதான நிகழ்வு நேற்றும் இன்றும் பொலன்னறுவையில் இடம்பெறும்.

மகிந்ததேரர் இலங்கைக்கு வருகை தந்த பொசொன் பௌர்ணமி தினத்தில் வரலாற்று முக்கியத்துமிக்க புண்ணியஸ்தலங்களுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பொலன்னறுவை பௌத்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்த வருடாந்த அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

மகா சங்கத்தினருக்கான அன்னதானம் வழங்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதியின் தலைமையில் பொதுமக்களுக்கான அன்னதான நிகழ்வு அரம்பித்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா அமரபுர நிகாயவின் உடரட அமரபுர பிரிவின் அனுநாயக்க தேரர் ஜப்பானின் தலைமை சங்க நாயக்க தேரர் சங்கைக்குரிய யாலகமுவே தம்மிஸ்ஸர நாயக்க தேரரினால் விசேட அனுசாசன உரை நிகழ்த்தப்பட்டது.

 

இந்நிகழ்வில் எலகர, பகமூன பிரதான சங்கைக்குரிய லியங்கஸ்வகுரே தேவானந்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பங்குபற்றினர்.

 

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பொலன்னறுவை புண்ணிய பூமிக்கு வருகை தந்திருந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த அன்னதான நிகழ்வில் பங்கேற்றனர். அவர்களுக்கான அன்னதான வழங்கும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியும் பங்குபற்றினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொலொன்னே, சிறிபால கம்லத், வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள் – முசலியில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 217 பேர் வெளியேற்றம்

பலமான காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும்