விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து சவுதி – உருகுவே அணிகள் வெற்றி

(UTV|RUSSIA)-உலகக் கோப்பை கால்பந்து போட்டி A பிரிவில் சவுதிஅரேபியா மற்றும் உருகுவே அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் உருகுவே மற்றும் ரஷியா அணிகள் மோதின.இப்போட்டியின் ஆரம்பம் முதல் உருகுவே அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் உருகுவே அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

A பிரிவில் சவுதிஅரேபியா மற்றும் எகிப்து அணிகள் போட்டியிட்டன. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வெற்றிபெற்றது.

B பிரிவில் இடம்பெற்ற போட்டியில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. புள்ளிகள் அடிப்படையில் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. அடுத்த சுற்றில் ரஷ்யா அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் , B பிரிவில் ஈரான் மற்றும் போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. எனவே 3 ஆட்டங்களின் முடிவில் 5 புள்ளிகள் பெற்ற போர்த்துக்கல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவுக்கு

வைட்வோஷ் ஆனது இலங்கை

அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை நெருங்கிய யாரும் எதிர்ப்பார்க்காத முன்னாள் பிரபல வீரர்!!!