(UTV|COLOMBO)-சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத்தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 1970ஆம் ஆண்டு இந்த தினத்தை பிரகடனப்படுத்தியது. போதைப்பொருள் பாவனையற்ற சர்வதேச சமூகத்தை கட்டியெழுப்ப தேவையான இலக்கை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும் ஒத்துழைப்புக்களையும் வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத் தினத்திற்கு அமைவாக அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபை இன்று தொடக்கம் ஒரு வாரத்திற்கு போதைப்பொருள் ஒழிப்;பு வாரத்தை பிரகடனம் செய்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பேராசிரியர் சமன் அபேயசிங்க தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கும், இளைஞர், யுவதிகளுக்கும், பெற்றோருக்கும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. .
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]