விளையாட்டு

204 ஓட்டங்களுடன் வெளியேறிய மேற்கிந்திய தீவுகள் அணி

(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை மேற்கிந்திய தீவுகள் அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிராத்வைட் 2 ஓட்டங்களிலும், ஸ்மித் 2 ஓட்டங்களிலும், பாவெல் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து களமிறங்கிய ஹோப் 11 ஓட்டங்களிலும், ரோஸ்டன்சேஸ் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்த காரணத்தால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

மழை நின்றதும் ஆட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஷேன் டாவ்ரிச் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஜோடி 115 ஓட்டங்களை சேர்த்ததால் மேற்கிந்திய தீவுகள் அணி 200 ஓட்டங்களை கடந்தது.

ஷேன் டாவ்ரிச் 71 ஓட்டங்களிலும், ஜேசன் ஹோல்டர் 74 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 69.3 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டும், கசின் ரஜிதா 3 விக்கெட்டும், சுரங்கா லக்மால் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் விலகல்

ரஃபேல் நடால் 89 ஆவது பட்டத்தையும் தன்வசப்படுத்தினார்

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு