வகைப்படுத்தப்படாத

சர்வதேச யோகா தினம் பிரதமர் மோடி யோகா பயிற்சிகள் மேற்கொண்டார்

(UTV|INDIA)-பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை 2015-ம் ஆண்டில் அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தன்று உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன் நகரில் உள்ள வனத்துறை ஆராய்சி மையத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. பிரதமர் மோடி, மற்ற மாணவர்கள் அதிகாரிகளுடன் யோகா பயிற்சி மேற்கொண்டார். சுமார் 55 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக அவர் பேசும் போது, யோகா உலகம் முழுவதையும் இணைக்கும் ஒரு கருவியாகி உள்ளதாக கூறினார். இதேபோல, நாட்டின் பல்வேறு நகரங்களில் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது. ராணுவ தளங்கள், போர்க்கப்பல்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா செய்து வருகின்றனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Case against Chief of Defence Staff postponed

பந்துல குணவர்தன அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல்

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அசம்பாவித்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.