வகைப்படுத்தப்படாத

தொடரும் வர்த்தக போர் – புதிய வரி விதிப்பு – டிரம்ப் அச்சுறுத்தல்!

(UTV|AMERICA)-சீனாவுடன் நிலவும் வர்த்தக போரின் தொடர்ச்சியாக, 200 பில்லியன் டொலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

புதிய வரி விதிப்பை அமல்படுத்த இது தொடர்பான சீன இறக்குமதி பொருட்கள் எவை என்று கண்டறியுமாறு தனது வர்த்தக ஆலோசகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

50 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான சீன பொருட்கள் மீது 25 சதவீதம் வரிவிதிப்பை கடந்த வாரத்தில் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலடியாக 50 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான 650 அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது இதே போன்ற கூடுதல் வரிவிதிப்பை சீனாவும் அறிவித்தது.

இது தொடர்பாக நேற்று டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ´´தனது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள சீனா மறுத்தால், இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வரும்´´ என்று குறிப்பிட்டார்.

´´மேலும், அமெரிக்க பொருட்கள் மீது தான்அறிவித்த புதிய வரிவிதிப்பை சீனா அமல்படுத்துனாலும், அமெரிக்கா சீன இருக்கும்தி பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பை அமல்படுத்தும்´´ என்று அவர் மேலும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

´´அமெரிக்க பொருட்கள் மீது மீண்டும் சீனா வரிவிதிப்பு மேற்கொண்டால், 200 பில்லியன் டொலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்படும். அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக உறவு நியாயமான முறையில் இருத்தல் அவசியம்´´ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா வர்த்தக தடைகளை அறிமுகப்படுத்தினால், அந்நாட்டுடன் உள்ள அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் செல்லாமல் ஆகிவிடும் என சீனாவின் அரசு ஊடகமான சின்ஹூவா எச்சரித்தது.

சீனாவின் லியோ ஹ மற்றும் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான வில்பர் ராஸ், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனையடுத்து, சீனா பல நாடுகளிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது.

சீன பொருட்கள் மீது 50 பில்லியன் டொலர்கள் வரை அதிக கட்டணங்கள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அச்சுறுத்தியதையடுத்து வில்பர் ராஸ் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகளுக்கு அமெரிக்க கட்டணங்கள் விதித்தது ஜி7 நாடுகளை கோபப்படுத்தி உள்ளது.

மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதித்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

කුලසේකරගේ සමුගැනීම ගැන ලසිත් කියූ සංවේදී කතාව(වීඩියෝ)

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலிற்கு விஜயம்!!

அலோசியஸின் பிணை கோரிக்கை – உத்தரவு 16ம் திகதி