கேளிக்கை

ரஜினி கதையில் நடிக்கும் விஜய்

(UTV|INDIA)-முருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படம் ரஜினி நடிக்க இருந்த கதை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம் பல இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இருவர் ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன். இவர்கள் இருவர் சொன்ன கதைகளும் ரஜினிக்குப் பிடித்திருந்தன. அதில் வெற்றிமாறன் சொன்ன கதையைக் கேட்டு முடித்ததும் `இது வங்கியில் போடும் முதலீடு போல. எப்போது வேண்டுமானாலும் இந்தக் கதையில் நடிக்கலாம். எப்போது நடித்தாலும் இந்தப் படம் வெற்றி பெறும்’ என்று கூறி வெற்றிமாறனைக் காத்திருக்க சொன்னார் ரஜினி.
முருகதாஸ் சொன்ன கதையைக் கேட்டதும் அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்ட ரஜினி `இதுதான் என் அடுத்த படம். கண்டிப்பாக இதில் நாம் சேர்ந்து எடுக்கிறோம்‘ என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். அது ஆக்‌ஷன் கலந்த அரசியல் கதை. அதை முருகதாஸ் ரஜினிக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கியிருந்தார். ஆனால் முருகதாஸ் ஸ்பைடர் படத்தில் இருந்ததால் ரஜினியை இயக்கும் வாய்ப்பு மீண்டும் ரஞ்சித்துக்கே சென்று இருக்கிறது. அப்படி ரஜினிக்காக உருவாக்கிய கதையில் விஜய்யை நடிக்க வைத்துவிட்டாராம் முருகதாஸ். ஆக, ரஜினி நடிக்க இருந்த கதையில் விஜய் நடிக்கிறார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கடைசி விவசாயி

மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸை பெற்ற சமந்தா லீக் செய்த போட்டோ

சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது