சூடான செய்திகள் 1

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போழுது நிலவும் தபால் பகிஷ்கரிப்பு காரணமாக தகுதியான பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டை கிடைக்காத போதிலும் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு பரீட்சாத்திக்காவது பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கவில்லை ஆயின் பரீட்சை திணைக்களம் அல்லது வெளிநாட்டு பரீட்சை கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொலைபேசி இலக்கம் வருமாறு: 011-2785230

தொலைநகல் இலக்கம் : 011-2784232

மேலும் குறிப்பிட்ட பரீட்சைக்கு சமூகமளிக்கும் பரீட்சாத்திகளுக்கு பரீட்சை நடைபெறும் திகதி, பரீட்சை நடைபெறும் மத்திய நிலையம் ஆகியவற்றுடன், குறுஞ்செய்தி ஒன்று விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசிக்கு கிடைக்கபெறும்.

தற்போழுது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பரீட்சைக்கான பரீட்சை கட்டணம் செலுத்துவதற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மலையக ரயில் போக்குவரத்து தாமதம்

ஸ்ரீ. பொ.முன்னணி – இ. தொ.காங்கிரஸ் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

தங்காலையில் 48 மணிநேர நீர் விநோயகத்தடை