கேளிக்கை

என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்ட விஜய் சேதுபதி

(UTV|INDIA)-கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாயிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்துவரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில், விஜய் சேதுபதி, சாயிஷா, சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் கோகுல், டெல்லி கணேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, வருண், பொன்வண்ணன், சித்தார்த் விபின், அருண் பாண்டியன், ஐசரி கணேஷ் இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் சரண்யா பொன்வண்ணன் பேசும்போது,
தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பின்னர், 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜுங்கா படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த போது, என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று விஜய் சேதுபதி கேட்டார். அப்போது அவரிடம், உங்களைப் போன்ற நிறைய பேர் திறமையால் உயர்ந்திருக்கிறார்கள் என்றேன். முதல் படத்தில் அவ்வுளவு பயந்து கொண்டிருந்த விஜய் சேதுபதியுடன் இந்த படத்தில் நடித்துள்ளேன். அதுமட்டுமில்லாமல், அவரிடம் இருந்தே சம்பளம் வாங்கியிருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல குணம் தான் அவரது முன்னேற்றத்திற்கு காரணம். அவர் மேலும் வளர வாழ்த்துக்கள் என்றார்.
கோகுல் இயக்கத்தில் நடித்தது, 10 வயது குறைந்தது போல உணர்கிறேன். அவ்வுளவு சுறுசுறுப்பு, மகிழ்ச்சியுடன் அவர் படத்தில் பணியாற்ற முடியும். ஜுங்கா வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது என்றார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ரஞ்சனுக்கு மக்கள் நடிகருக்கான விருது

தற்கொலை எண்ணம் என்னை வாட்டியது!- ஏ.ஆர். ரஹ்மான்

ஜஸ்டின் பீபருக்கும் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் நிச்சயதார்த்தம்