வகைப்படுத்தப்படாத

கவுதமாலா எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

(UTV|AMERICA)-மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை நேற்று வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. இதையடுத்து கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

எரிமலை வெடிப்பினால் இன்று காலை வரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரழிவு தடுப்பு ஒருங்கிணைப்பாளர் கான்ரெட் தெரிவித்துள்ளார்.

ஃபுயீகோ எரிமலையைச் சுற்றி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பலர் காணாமல் போனதாகவும், அவர்கள் குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை என்றும் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

முன்னதாக தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவரும், அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொராலசும் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிபர் ஜிம்மி மொராலஸ், எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் ‘ரெட் அலார்ட்’ அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவர், நேற்று இரவு வெளிச்சம் குறைவாக இருந்ததால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், இன்று காலை மீட்பு பணி மீண்டும் துவங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

US launches inquiry into French plan to tax tech giants

எதிர்வரும் 11 ஆம் திகதி இஸ்ரேல் பிரதமர், இந்தியா விஜயம்

புதிய லக்கல நகரம்