சூடான செய்திகள் 1

சகல அமைச்சுக்களும் சுதந்திரமாக தனது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்

(UTV|COLOMBO)-தற்போது நாட்டின் சகல அமைச்சுக்களும் சுதந்திரமாக தனது செயற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி என்ற ரதியில் தான் வழிவகுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

அன்று அமைச்சர்களோ அல்லது அமைச்சின் செயலாளர்களோ அன்றி, அவர்களுக்கு மேல் இருந்தவர்களாலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல விதமான வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இன்று ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்ச்சி

13 மணித்தியாலங்கள் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு?

அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பு