சூடான செய்திகள் 1வணிகம்

விவசாயக் காப்புறுதிக்காக 5,228 மில்லியன் ரூபா – அமைச்சர் மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-சிறுபோகத்திற்கான விவசாய காப்புறுதி சான்றிதழை வழங்கும் ஆரம்ப வைபவம் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் ஹம்பாந்தோட்டை நோனாகம கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறும்.

 

முதல் தடவையாக விவசாய காப்புறுதியை இலவசமாக வழங்கும் பணி இன்று ஆரம்பமாகிறது.

நெல், வெங்காயம், மிளகாய், சோளம், உருளைக்கிழங்கு ஆகிய பயிர் உற’பத்தி விவசாயிகளுக்கு இதன் மூலம் நன்மை கிட்டவுள்ளது.

 

2018ம் ஆண்டில் விவசாயக் காப்புறுதிக்காக அரசாங்கம் 5 ஆயிரத்து 228 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

பயிர் சேதங்களின் போது விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் விவசாய காப்புறுதி வேலைத்தி;ட்டத்தின் கீழ், உறுப்பினர் தொகையாக வருடாந்தம் 1,350 ரூபாவை இதுவரைக் காலம் விவசாயிகள் செலுத்த நேர்ந்தது.

 

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய, இந்த கொடுப்பனவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும்

புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால்..

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரவியின் வீட்டிற்கு