சூடான செய்திகள் 1

நாடாளுமன்ற வளாகப் பகுதி நீரில் மூழ்கும் நிலைமை?

(UTV|COLOMBO)-நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடாளுமன்ற வளாகப் பகுதி நீரில் மூழ்கும் நிலைமை உள்ளமை குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடாளுமன்ற வளாகப் பகுதி நீரில் மூழ்கும் நிலைமை உள்ளமை குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

தியவன்னா ஆற்றின் நீர்மட்டம் குறித்து ஆராய்வதற்காக, நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி சரத் குமாரவினால், கடற்படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த குழுவினரால் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை, ஆற்றின் நீர்மட்டம் அளவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த குழுவினரால் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை, ஆற்றின் நீர்மட்டம் அளவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தியவன்னா ஆற்றை அண்டிய பகுதிகளில் உள்ள சில வீடுகளுக்குள் நீர் உட்புகும் நிலைமை உள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் மற்றும் நாடாளுமன்ற கட்டிடத்தின் கீழ் தளம் என்பன நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்த தீர்மானம் – விமானப் படை பேச்சாளர்

கொரோனா வைரஸ் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

இன்று முதல் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகமாகக்காணப்படும்