சூடான செய்திகள் 1

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்.

இறுதிக்கிரியைகளுக்காக 15ஆயிரம் ரூபா நிதி பிரதேச செயலாளர் , கிராமசேவகர் ஊடாக உடனடியாக வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திரண தெரிவித்துள்ளார்.

எஞ்சிய தொகை 85 ஆயிரம் ரூபா சம்பந்தப்பட்டவரின் மரணச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு கட்டங்களில் இந்த தொகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அனர்த்தம் ஏற்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக நிதி வழங்கப்பட்டுள்ளது. அனத்தத்தின் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுள் 4 பேர் இடிமின்னலினால் உயிரிழந்துள்ளனர். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கையில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 132 தாண்டியது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்