வகைப்படுத்தப்படாத

குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு

(UTV|INDIA)-குஜராத் மாநிலம், துண்டா கிராமத்தில் டாடா முந்த்ரா மின் உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு வாஷிங்டனில் அமைந்து உள்ள உலக வங்கியின் நிதிப்பிரிவான சர்வதேச நிதிக்கழகம் 450 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3 ஆயிரத்து 60 கோடி) நிதி உதவி அளித்து உள்ளது.

இந்த அனல் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் புதா இஸ்மாயில் ஜாம் என்பவரது தலைமையில் குஜராத் விவசாயிகளும், மீனவர்களும் ஒன்று சேர்ந்து ஒரு வழக்கு தொடுத்து உள்ளனர்.

அந்த வழக்கில், டாடா முந்த்ரா மின் உற்பத்தி ஆலையால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த மின் உற்பத்தி ஆலையில், சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல்தரம் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பல்வேறு கோர்ட்டுகளை வழக்குதாரர்கள் நாடினர். ஆனால் அங்கெல்லாம் சர்வதேச நிதிக்கழகம், 1945-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச அமைப்புகள் விலக்கு உரிமை சட்டத்தின்கீழ், வழக்குகளில் இருந்து விலக்கு உரிமை பெற்று உள்ளது என கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.

அதைத் தொடர்ந்தே இப்போது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு உள்ளனர்.

இந்த வழக்கை அந்த கோர்ட்டு ஏற்றுக்கொண்டுவிட்டது. இதுபற்றி அந்தக் கோர்ட்டு குறிப்பிடுகையில், 1945-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச அமைப்புகள் விலக்கு உரிமை சட்டத்தின்கீழ், சர்வதேச நிதிக்கழகம் வழக்கு தொடரப்படுவதில் இருந்து விலக்கு உரிமை பெற்று உள்ளதா என்பது ஆராயப்படும் என கூறியது.

இந்த வழக்கின் மீது அக்டோபர் மாதம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

15 மணித்தியால நீர்விநியோக தடை

களனிவெளி தொடரூந்து பாதை இன்று முதல் மூடப்படும்

Sirisena and Madurangi to lead SL at Commonwealth TT Championship