சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 84,943 பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நாட்டின் 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றத்தில் 18,542 குடும்பங்களின் 84,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் 7526 குடும்பங்களின் 27,621 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்கள் 194 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 22,673 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 12,760 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 7482 பேரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பது இரத்தினபுரி மாவட்டத்திற்கு என்பதுடன், அங்கு 27,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, இரத்னபுரி, கிரிஎல்ல, அயகம, நிவிதிகல, கலவான, எஹெலியகொட, குருவிட்ட, கஹவத்த, ஓப்பநாயக்க, பெல்மடுல்ல, பாலங்கொட, இம்புல்பே, கொடகவெல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட 189 கிராம சேவகர் பிரிவுகளின் 6133 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 24,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 06 வீடுகள் முழுமையாகவும், 139 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தற்போது 1961 குடும்பங்களைச் சேர்ந்த 7861 பேர் உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளதுடன் அந்த மாவட்டத்தில் 38 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தெரிவித்தார்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில், உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் 68 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

இவர்களுக்கு தேவையான அனர்த்த உதவிகளை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது சில நீர் நிலைகளில் மழை நீர் நிரம்பி வருகின்றது. மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்தேக்கங்களின் நீரின் மட்டம் உயர்ந்துள்ளது.

மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவு ஒன்று இன்று (23) காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹட்டன் செனன் கே.எம் டிவிசனில் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டம்

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

கோதுமை மாவினை அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை