வணிகம்

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்

(UTV|COLOMBO)-இலங்கையின் முன்னணி தகவல் கட்டமைப்பு தீர்வுகள் வழங்குநரான Millennium Information Technologies (Pvt) Ltd (MillenniumIT ESP) தனது வியாபார செயன்முறைகளை எளிமைப்படுத்திக் கொள்ளவும், நிதிசார் செயற்பாடுகளில் பிரசன்னத்தை மேம்படுத்திக் கொள்ளவும் Oracle Enterprise Resource Planning (ERP) Cloud தீர்வை அணுகியுள்ளது.

இந்த திட்டம் 10 வாரங்களில் பூர்த்தி செய்யப்பட்டதுடன், இந்த திட்டத்தினூடாக MillenniumIT ESP க்கு தகவல் தொழில்நுட்ப சிக்கல் நிலையை தணித்துக் கொள்ள முடிந்ததுடன், ஊழியர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்தது. மேலும், முன்னர் கைமுறையால் மேற்கொள்ளப்பட்ட செயன்முறைகளை தற்போது தன்னியக்கமாக மேற்கொள்ள முடியும் என்பதுடன், உயர் தரவு பகுப்பாய்வினூடாக தீர்மானமெடுத்தல்களை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.

2017 டிசம்பரில், லங்கா சென்சரி இன்வெஸ்ட்மன்ட்ஸ் பிஎல்சி, லன்டன் ஸ்டொக் எக்ஸ்சேன்ஜ் குரூப் (LSEG) குழுமத்திடமிருந்து MillenniumIT ESP இன் நூறு சதவீதமான பங்குகளை கொள்வனவு செய்திருந்தது. இந்த கையகப்படுத்தலுடன், MillenniumIT ESP தனது சொந்த ERP கட்டமைப்பை கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டதுடன், குறுகிய காலப்பகுதியில் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு நடத்துவதற்கு நேரடியாக இயங்க வேண்டிய நிலையையும் எய்தியிருந்தது.

MillenniumIT ESP இனால் Oracle ERP Cloud கட்டமைப்பு தனது செயற்பாடுகளில் நிறுவப்பட்டுள்ளதுடன், இதனூடாக நிதி, கொடுப்பனவு, பண ஏற்பாடுகள் மற்றும் செலவீன முகாமைத்துவம் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். புதிய cloud மாதிரிகள் MillenniumIT ESP இன் ஏற்கனவே காணப்படும் Oracle’s E-Business Suite க்கு ஒப்பானதாக அமைந்துள்ளது. Oracle Financial Cloud என்பது MillenniumIT ESP க்கு சிறந்த பொருத்தமாக அமைந்துள்ளதுடன், செயன்முறைகளை தன்னியக்கப்படுத்த ஏதுவானதாக அமைந்திருப்பதுடன், வினைத்திறனை மேம்படுத்துவதுடன், குறைந்த காலத்தை செலவிட்டு, தரவுகளை பதிதல் மற்றும் கையாளலில் ஈடுபட்டுள்ளதுடன், பகுப்பாய்வுக்கு அதிகளவு நேரத்தை ஈடுபடுத்தி செயற்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

சீனாவிடமிருந்து 500 மில்லியன் உறுதி

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு