வளைகுடா

தடை நீக்கம் இல்லை

(UTV|SAUDI)-சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுபாடுகள் இருக்கிறது.

சவுதி அரேபிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். இதற்கிடையே சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட இருந்த தடையை நீக்கி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டார்.

பெண்கள் கார் ஓட்ட அனுமதி வருகிற ஜூன் மாதம் 24-ந் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், சட்டம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதற்காக மாதர் நல ஆர்வலர்களான 7 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது.

கடந்த 15-ந் திகதி முதல் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர்களில் இமன் அல் நப்ஜன், லுரெயின் அல் ஹத்நுல், அசிசா அல்-யூசப் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இதில் இமன்-அல்- நப்ஜன், லுரெயின் அல்-ஹத் நுல் ஆகியோர் ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு காரை ஓட்டியதாக கைது செய்யப்பட்டு 75 நாட்கள் சிறையில் இருந்தவர்கள்.

இவர்கள் 7 பேரும் வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஒற்றுமையை பிளவுபடுத்த முயற்சி செய்ததாகவும் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

பெண்கள் கார் ஓட்ட தடையை நீக்க கோரி போராடியவர்கள் அந்த தடை நீக்கப்படுவதற்கு முன்பே தேசதுரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பெண்கள் தங்கள் சொந்த நிறுவனங்களை நடத்த ஆண்களின் அனுமதியை நாட வேண்டிய சட்டத்தையும் பட்டத்து இளவரசர் சல்மான் அகற்றினார் என்று குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

துருக்கி அமைச்சரவையில் நிதி அமைச்சர் அர்துகானின் மருமகனார்

சவுதி அரேபியாவில் ஏப்ரல் 18 முதல் சினிமா தியேட்டர் திறக்கப்படும் – சவுதி அரசு அறிவிப்பு

கடும் மழை, வெள்ளம் – 7 பேர் உயிரிழப்பு