வகைப்படுத்தப்படாத

காங்கோவை மீண்டும் தாக்கிய எபோலா வைரஸ்

(UTV|CONGO)-விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இந்த நோய் முதலில் 2013-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. 2016-ம் ஆண்டு வரை இந்த வைரஸ் நோய்க்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். எபோலா வைரஸ் நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்சுகளும் பாதிப்புக்கு ஆளாகினர்.

இப்போது மறுபடியும், காங்கோ நாட்டில் இந்த வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு மபண்டாகா நகரில் இந்த நோய் பரவி வருகிறது. கடந்த சில தினங்களில் இந்த வைரஸ் நோய் தாக்கி 23 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த வைரஸ் நோய் பரவி வருவதை காங்கோ நாட்டின் சுகாதார மந்திரி ஒலி இலுங்கா கலிங்கா உறுதி செய்தார்.

தற்போது 52 பேரை இந்த நோய் தாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே அந்த நாட்டுக்கு 4 ஆயிரம் பேருக்கு செலுத்தத்தகுந்த எபோலா வைரஸ் தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் சோதனை ரீதியில் அனுப்பி வைத்து உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

අමෙරිකාව වසර 16 කට පසු මරණ දඩුවම යළි ක්‍රියාත්මක කිරීමට සැරසේ

சுவையான சூப்பர் ஸ்பைசி நண்டு கிரேவி செய்வது எப்படி?

பாதுகாப்பு விதிகளுக்குட்படாத வாகன இறக்குமதிக்கு தடை