சூடான செய்திகள் 1

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு எட்டு மணியுடன் நிறைவு

(UTV|COLOMBO)-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு போரட்டம் இன்று காலை எட்டு மணியுடன் நிறைவடைகின்றது.

நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமான இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளின் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

மருத்துவமனைகளின் சிகிச்சைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளின் பணிகள் தடைப்பட்டதால், நோயாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

எனினும், சத்திர சிகிச்சை மற்றும் அவசர சேவைகள் என்பன வழமை போல இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த போரட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஒஸ்ரின் பெர்ணாண்டோவிடம், மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு மற்றும் சிங்கப்பூர் இலங்கை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதிலளித்த அவர், குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் வரையறைக்கு உட்பட்டு கடமையாற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா வானுர்தி சேவை இந்த கோரிக்கையை பயணிகளிடம் விடுத்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

நாளை(17) முதல் ஜனாதிபதி நிதியம் புதிய இடத்திற்கு இடம்மாற்றம்

பாக்கு நீரினையை  நீந்திக் கடக்க உள்ள  திருகோணமலை  சாஹிரா கல்லூரி மாணவன் !

ஜனாதிபதியின் முக்கிய உரை – தமிழில்