சூடான செய்திகள் 1

புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து ஒருவர் தற்கொலை

(UTV|COLOMBO)-கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த காரியாலய புகையிரதம் ஒன்றிற்கு தலையை வைத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (08) இரவு 8.21 மணியளவில் சிலாபம் – அளுத்வத்த பிரதேசத்திலே இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் இளைஞர் ஒருவர் என்றும் அவருடைய தலை உடலை விட்டு பிரிந்து இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர் இல்லை எனவும் அவரை அடையாளம் தெரியாது எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

புகையிரத ஊழியர்களினால் சடலம் சிலாபம் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் யார் என்பதனை அடையாளம் காண்பதற்கு விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை

மாக்கும்புர போக்குவரத்து நிலையத்துடன் இணைந்த ரயில் நிலையம் திறப்பு…