வகைப்படுத்தப்படாத

டிரம்ப்-கிம் ஜாங் அன் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை?

(UTV|SINGAPORE)-கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும் பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் ஜூன் மாத மத்தியில் சந்தித்து பேசுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது கூறப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று மட்டும் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை தென்கொரியா பாதுகாப்பு ஆலோசகர் யூ-யோங் நேற்று முன்தினம் இரவு வாஷிங்டன் நகரில் சந்தித்து பேசினார். அவர்கள் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்து விவாதித்தனர். அப்போது சிங்கப்பூர் நாட்டில் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என்று இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விளையாட்டு மைதானம் வெட்ட இடம் கொடுக்க மறுத்த பொகவந்தலா ஆல்டி தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்பாட்டம்

நாளை ஜப்பான் செல்கிறார் மஹிந்த

அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி