சூடான செய்திகள் 1

ஹப்புத்தளையில் மண்சரிவு

(UTV|BADULLA)-ஹப்புத்தளை – ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வல்லப்புதென்ன வழியாக கிரிமிட்டிய செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கினிகந்கல, கிரிமிட்டிய மற்றும் களுப்பான ஆகிய ஊர்களுக்கு செல்லும் வழி தடைப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 360 குடும்பங்களனின் போக்குவரத்து வசதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வருவதாகவும் நேற்றும் இன்றும் அந்த சரிவு அதிகரித்திருக்கின்றது.

இந்த சரிவு மேலும் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடும் மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இரண்டு பெண்களை சீரழித்த காவற்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை…

முஸ்லிம் பெண்கள் 9 அம்சக் கோரிக்கை முன்வைப்பு

பொலிஸ் மா அதிபர் உட்பட 43 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்