சூடான செய்திகள் 1

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்

(UTV|COLOMBO)-டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான    ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு முன்னதாகவே கிடைக்கும் வகையில் அந்தந்த பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளதோடு இது வரை இவ்விண்ணப்பங்கள் கிடைக்கவில்லையெனின் திணைக்களத்தின் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளைக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின்  இணையத்தளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

உரிய தினத்திலோ அதற்கு முன்னதாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கோட்டாபய ராபஜக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் – சந்திரிக்கா

பேருவளை ஹெரோயின் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்…

விஷேட ஆராதனைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை