சூடான செய்திகள் 1

60 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கல்பிட்டிய, எரம்புகொடெல்ல பிரதேசத்தில் வைத்து 60 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று இரவு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கல்பிட்டிய, எரம்புகொடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு சொந்தமான சிறிய வீடொன்றில் இந்த கேரளா கஞ்சா தொகை வைக்கப்பட்டுள்ளதுடன், வேறொரு நபர் வந்து எடுத்துச் செல்லும் வரை இவை தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையும் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

கல்பிட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டை கட்டியெழுப்ப சகல பெண்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

அம்பலாந்தோட்டை – புஹுல்யாய வீதியின் ஒருபகுதி திடீர் தாழிறக்கம்!!

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!