விளையாட்டு

119 ஓட்டங்களை பெற முடியாமல் சுருண்ட மும்பை அணி

(UTV|INDIA)-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 118 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தது.

இந்த எளிய இலக்கை கூட அதுவும் சொந்த மண்ணில் எட்ட முடியாமல் மும்பை அணி 18.5 ஓவர்களில் 87 ஓட்டங்களில் சுருண்டது.

அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் (34 ஓட்டங்கள்), குணால் பாண்ட்யா (24 ஓட்டங்கள்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. ஐ.பி.எல். வரலாற்றில் 120-க்கும் குறைவாக ஓட்டங்கள் எடுத்து இதில் வெற்றி பெற்ற 2-வது அணி ஐதராபாத் ஆகும்.

ஏற்கனவே 2009-ம் ஆண்டு சென்னை அணி பஞ்சாப்புக்கு எதிராக 117 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்து அதில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

5-வது தோல்விக்கு பிறகு மும்பை தலைவர் ரோகித் சர்மா கூறுகையில், ‘இந்த தோல்விக்காக எங்களை நாங்களே தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும். 119 ஓட்டங்கள் இலக்கு என்பதை எந்த மைதானத்தில் என்றாலும் எடுத்திருக்க வேண்டும்.

எங்களது பந்து வீச்சு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் ஒரு முறை சொதப்பி விட்டனர். நான் உள்பட சில வீரர்களின் ஷாட் தேர்வு மோசமாக இருந்தது.’ என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இறுதி போட்டிக்கு முன்னேறிய சென்னை

65 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி …

3 ஓட்டங்களால் வெற்றியை தம் வசப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி