கேளிக்கை

காதலியை மணந்த வில்லன்

(UTV|INDIA)-கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான `பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மிலிந்த் சோமன். தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான `அலெக்ஸ் பாண்டியன்’, `பையா’ படங்களிலும் நடித்தார். மேலும் இந்தி, தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் (52), அங்கிதா கொன்வர் (26) என்பவரை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். இவர்களது 4 வருடக் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் இவர்களது திருமணம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில் இருவீட்டாரது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முன்னதாக மிலிந்த் பிரஞ்சு நடிகை மைலன் ஜம்பனோயை திருமணம் செய்து கடந்த 2009-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் பற்றிய கூறிய மிலிந்த், “மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணமா என்கிறார்கள். எனக்கு மற்றவர்கள் பேசுவது பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு எங்களைப்பற்றி எதுவும் தெரியாது” என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நடிகை சரண்யா மோகனின் தற்போதைய நிலை?

பிரபல நடிகர் காமினி ஹெட்டியாராச்சி காலமானார்

சூர்யாவுக்கு வந்த புது சிக்கல்!