வணிகம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி

(UTV|COLOMBO)-இலங்கையில் அலங்கார மீன் ஏற்றுமதி மற்றும் உள்ளுர் வர்த்தகத்திற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏற்றுமதி துறையை கூடுதலான வருமானத்தை பெறக்கூடிய அலங்கார மின் தொழில்துறைக்கு சர்வதேச தரத்தை அறிமுகப்படுத்தல், தேவையான தொழில்நுட்பம், நிதி வசதிகளை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

இதனூடாக தேசிய வர்த்தகம் மேம்படும் என்றும் எதிர்பார்ப்பதாக அலங்கார மீன் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள சங்கத்தின் தலைவர் ரவிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இந்தத் தொழில்துறையில் ஏழு மாகாணங்களில் சுமார் 250 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தொகையை 500 ஆக அதிகரிப்பது நோக்கமாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அலங்கார மீன் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

இன்றைய டொலரின் பெறுமதி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எகோ பாம் பல்வேறு வகையான விசேட உற்பத்திகளை அறிமுகம் செய்தது