கேளிக்கை

நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள்

(UTV|INDIA)-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி படஅதிபர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் புதிய படங்கள் ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார். படப்பிடிப்புகளும் நாளை முதல் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், முதல் படமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மெர்குரி படம் நாளை ரிலீசாக இருக்கிறது. அதனுடன் மேலும் 2 சிறிய பட்ஜெட் படங்களும் திரைக்கு வருகின்றன.
வசனங்களே இல்லாமல், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கும் மெர்குரி படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பின்னணி இசையின் மூலமே நகரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் ஏற்கனவே தமிழகம் தவிர்த்து உலகம் முழுவதும் கடந்த வாரமே ரிலீசாகிவிட்டன நிலையில், நாளை முதல் தமிழகத்திலும் ரிலீசாக உள்ளது.
இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மகனுக்கு கடவுள் பெயரிட்ட ‘கார்த்திக்’

பிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில்…

கல்யாண தகவலால் பட வாய்ப்பை இழந்த சாயிஷா?