சூடான செய்திகள் 1

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய விபத்து; 05 பேர் பலி – பல பேர் காயம்

(UTV|KALUTARA)-ஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா குழியை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் ஒருவர் அந்தக் குழிக்குள் விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக சென்ற பிரதேச மக்கள் நச்சு வாயுவை சுவாசித்துள்ளதால் பாதிப்படைந்துள்ளதுடன், 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஏனையவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அகலக் கால் விரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 தவிசாளர்களையும் 5 பிரதித் தவிசாளர்களையும் தனதாக்கியது.

மைத்திரியின் வாக்குமூலம் AGக்கு அனுப்பிவைப்பு!

போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கு மில்லியன் கணக்கில் கிடைத்துள்ளது – சிஐடி