வகைப்படுத்தப்படாத

நிறைவுக்கு வருகிறது காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி

(UTV|KIYUBA)-கியுபாவில் காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி நிறைவுக்கு வருகிறது.

கியுபாவின் அடுத்த தலைவராக, மிகுயல் டயஸ் கேனல், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தலைவராக இருக்கின்ற ராவுல் கஸ்ட்ரோவிற்கு பின்னர் அவரே கியுபாவின் தலைவராக செயற்படவுள்ளார்.

இதன்படி கியுபாவில் நீண்டகாலமாக இடம்பெற்ற காஸ்ட்ரோ குடும்பத்தினரின் ஆட்சி நிறைவுக்கு வருகிறது.

ஃப்டல் காஸ்ட்ரோவின் ஓய்வுக்குப் பின்னர் அவரது சகோதரரான ராவுல் காஸ்ட்ரோ, அந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

அவரது காலத்திலேயே அமெரிக்காவுடனான கியுபாவின் உறவு புத்தாக்கம் பெற்றது.

இந்த நிலையில், தற்போது அவரது பதவி விலகல் குறித்த அறிவிப்பு வெளியாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், ராவுல் காஸ்ட்ரோ எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் கமியுனிச கட்சியின் தலைவராக செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நைஜிரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் பலி!

மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை

மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள் காரணம் இதோ….