சூடான செய்திகள் 1

இன்று முதல் விசேட தொடரூந்துச் சேவைகள்

(UTV|COLOMBO)-புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட தொடரூந்துச் சேவைகள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று இரவு 7.20க்கு கொழும்பில் இருந்து பண்டாரவளை வரையிலும் குளிரூட்டப்பட்ட பொட்டிகளைக் தொடரூந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதனைத் தவிர, இன்று இரவு 10 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும், மாலை 6.50க்கு கொழும்பு கோட்டையில் இருந்து காலி வரையிலும் தொடரூந்துகள் இரண்டு சேவையில் ஈடுபடுத்தப்படும்.

அதுபோல், பிற்பகல் 1.55க்கு கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், மாலை 5.10க்கு மஹவயில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் விசேட தொடரூந்து சேவைகள் இரண்டு இடம்பெறவுள்ளன.

காலை 9.20க்கும் மற்றும் முற்பகல் 11.50க்கும் மருதானையில் இருந்து காலி வரையிலும் விசேட தொடரூந்துகள் இரண்டு சேவைகயில் ஈடுபடுவதுடன், இரண்டு 9.50க்கு காலியில் இருந்து மருதானை வரையிலும் தொடரூந்து ஒன்று சேவையில் ஈடுபடும்.

அதுபோல், பிற்பகல் 2.55க்கு மருதானையில் இருந்து மாத்தறை வரையிலும் இரவு 7 மணிக்கு மாத்தறையில் இருந்து மருதானை வரையிலும் தொடரூந்துகள் இரண்டு சேவையில் ஈடுபடும்.

அதேபோல் பிற்பகல் 1.15க்கும் மாலை 5.55க்கும் காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் தொடரூந்துகள் இரண்டு சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

டிக்டாக் செயலிக்கு தடை விதித்த – நியூயார்க்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு!!