சூடான செய்திகள் 1

ஆசிய பௌதீகவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு வியட்னாம் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு நிதி அன்பளிப்பு

(UTV|COLOMBO)-ஆசிய பௌதீகவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வியட்னாம் செல்லவுள்ள பாடசாலை மாணவர்கள் எட்டு பேருக்கு 10 இலட்சம்  ரூபா பணமும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று  (04) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை வியட்னாமில் நடைபெறவுள்ள ஆசிய பௌதீகவியல் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு மாத்தறை சுஜாத்தா வித்தியாலயம், எஹெலியகொட மத்திய மகா வித்தியாலயம், காலி ரிச்மண்ட் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி, கல்கிஸ்ஸ சென் தோமஸ் கல்லூரி, குருநாகல் மலியதேவ கல்லூரி ஆகிய கல்லூரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி எட்டு மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர். இந்த மாணவர்களுடன் ஜனாதிபதி அவர்கள் புகைப்படத்திற்கும் தோற்றினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

புனித குர்ஆனிலுள்ள விடயங்களை ஆராய தனியான குழு அமைக்கவேண்டும் – ஓமல்பே சோபித்த தேரர்

2019 சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்