வணிகம்

ஒலுவில் துறைமுகம் – துரித கதியில் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஒலுவில் துறைமுகத்தின் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பதற்காக அங்கு தற்பொழுது உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுகளான துறைமுகத்துக்கு தெற்காக உள்ள கடற்கரை பகுதியில் மணல் அகழ்வுகளை மேற்கொள்ளல் மற்றும் வடக்கு கரையில் மணல் நிரப்புவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொண்டு குறித்த அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதற்கு உகந்த இயந்திரங்களை அரச கொள்முதல் முறையின் கீழ் கொள்முதல் செய்வதற்கும் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

பேலியகொடை மீன் சந்தை 3 நாட்களுக்கு பூட்டு

நுகர்வோர் அதிகார சபை களத்தில்

நிலக்கடலை மற்றும் சோளத்திற்கான இறக்குமதி தடை