சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் வறுமையில் கல்விகற்கும் சில மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

(UTV|KILINOCHCHI)-டென்மார்க் நாட்டில் இருந்து வாணி தனேஷ் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் வாணி சமூக பொருளாதார சுய  மேம்பாட்டு நிறுவனத்தினரால் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமையிலும் தமது கல்விகளைத் தொடரும் பதினோரு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு பாடசாலை செல்வதற்கு துவிச்சக்கார வண்டியினை வழங்கியுள்ளனர்

கிளிநொச்சி மாவடியம்மான் கிராமத்தில் எட்டு துவிச்சக்கர வண்டிகளும் மற்றும் கிளிநொச்சியின் வட்டக்க்கச்சி ,இராமநாதபுரம் ,தொண்டமனாறு  பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு சைக்கிளுமாக மூன்று துவிச்சக்கார வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது
இத் துவிச்சக்கர வண்டிகளுடன் இராமநாதபுரம் மற்றும் உதயநகர் பகுதியில் வசிக்கும் இரண்டு  பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழவாதரத்திற்கு   தலா ஐம்பதாயிரம் பெறுமதியில்  கோழிக் கூடு மற்றும் முட்டைக் கோழிகளும்  சமூக பொருளாதார சுய  மேம்பாட்டு நிறுவனத்தின் செயர்ப்பாட்டாளர்களால்  வழங்கப்பட்டுள்ளது
இவ்  சமூக பொருளாதார சுய  மேம்பாட்டு நிறுவனமானது தாயகத்தின் வாழவாதார  மறும் கல்வி தொடர்பான பல பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.என்.நிபோஜன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது

மா்மமான முறையில் உயிாிழந்த 04 யானைகளின் சடலங்கள் மீட்பு [PHOTOS]

ஹிருனிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைப்பு