வளைகுடா

எகிப்து அதிபராக மீண்டும் தேர்வான அப்துல் சிசிக்கு பிரான்ஸ் வாழ்த்து

(UTV|EGYPT)-எகிப்து நாட்டில் அதிபர் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதற்கான ஓட்டுப்பதிவு பல்வேறு கட்டங்களாக நடந்தன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அப்தெல் ஃபாட்டா அல்-சிசி மீண்டும் போட்டியிட்டார்.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிறையில் உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன. இதனால், அல்-சிசியை எதிர்த்து முக்கிய பிரமுகர்கள் யாரும் போட்டியிடவில்லை. இறுதியில் மோசா முஸ்தபா என்பவர் வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தேர்தலில் 6 கோடி மக்களில் 2.3 கோடி மக்கள் வாக்களித்தனர்.

இதற்கிடையே, பதிவான வாக்குகளில் 97 சதவீதம் வாக்குகள் பெற்று அப்துல் சிசி மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், எகிப்தில் நடந்த தேர்தலில் 97 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் முறையாக அதிபராக தேர்வான அப்துல் சிசிக்கு பிரான்ஸ் அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அக்னிஸ் வொன்  டெர் முஹில் கூறுகையில், எகிப்து அதிபராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்துல் சிசிக்கு வாழ்த்துக்கள். எகிப்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பிரான்ஸ் நிச்சயம் செய்யும் என தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜமால் கசோக்கியின் உடல் ஒவனில் வைத்து எரிக்கப்பட்டது?

ஓமான் விமான நிலையத்தில் ரோபோக்கள் வழிகாட்ட திட்டம்

அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம்