கேளிக்கை

நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முதலிடம்

(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவுடன் ‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் ‘3’, விஷாலுடன் ‘பூஜை’, விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, மீண்டும் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் தான் நடித்து வரும் படங்களின் புகைப்படங்கள், மற்றும் கருத்துக்களை பகிர்ந்து வருவார். ரசிகர்களுடன் இவருடன் உரையாடி வருகிறார்.

தற்போது இவரை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை தொட்டிருக்கிறது. இது தென்னிந்திய நடிகைகளில் யாருக்கும் இந்தளவிற்கு பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இல்லை.

நடிகர்களில் தனுஷ் முதலிடத்தில் உள்ளார். இவரை 7.25 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ரஜினி 4.61, கமல் 4.63 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கோலாகலமாக இனிதே நடைபெற்ற ஆர்யா-சாயிஷா ஜோடியின் திருமணம்..! (PHOTOS)

நீங்கள் சாதித்துவிட்டீர்கள்- பிரதமருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ராதிகாவின் போஸ்டர்…