(UTV|COLOMBO)-பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சங்கம் தற்சமயம் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹஷீமுடன் விசேட சந்திப்பொன்றை நடத்துகிறது.
வேதனம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்து அவர்களின் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுகிறது.
குறித்த போராட்டம் இன்று 34வது நாளாகவும் தொடர்கிறது.
இன்று இடம்பெறும் குறித்த கலந்துரையாடலுக்கு அமைய தீர்வு கிடைக்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]