சூடான செய்திகள் 1

மனைவியுடன் வீட்டுத்தோட்டத்தில் இருந்த கல்லக்காதலர் மண்வெட்டியால் தாக்கி பலி

(UTV|NUWARA ELIYA)-வீட்டுத்தோட்டத்தில் தனது  மனைவியுடன் உரையாடிக்கொண்டிருந்த  கல்லக்காதலரை  மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துவீட்டு பொலிஸில் சரணடைந்த சம்பவம் கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது

கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய ரகு என்பவரே இவ்வாறு பலியானார்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்  கொழும்பில் கூழி வேலை செய்யும் கொட்டகலை யதன்சைட் தோட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 01.04.2018 இரவு 9 மணியளவில் கொழும்பிலிருந்து வீட்டிற்கு வந்த வேலை வீட்டில் மனைவி இல்லாத நிலையில் பிள்ளைகளிடம் அம்மா எங்கே என வினவியதாகவும் அம்மா வெளியே சென்றதாக பிள்ளைகள் கூற வீட்டின் முன்னால் உள்ள வீட்டுத்தோட்டத்தை பார்த்தபோது அங்கு அயல் வீட்டு காரனுடன் தனது மனைவி உரையாடிக்கொண்டிருப்பதை கண்டு ஆத்திரமுற்ற நிலையில் வீட்டினுள் இருந்த மண்வெட்டியை எடுத்து வந்து இருவரையும் தாக்கியுள்ளர் தாக்குதலுக்கு இலக்காகிய அயல்வீட்டுகாரரான 50. வயதுடைய எஸ். ரகு ஸ்தலத்திலே பலியானதுடன் மனைவி காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்துடன் தாக்குதல் நடத்திய நபர் திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலையத்தில் சரனடைந்துள்ளார்  சம்பவம் தொடர்பில்  விசாசணையை தொடர்வதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு

இன்று(12) பாராளுமன்றம் பிற்பகல் 1 மணிக்கு கூடுகிறது