சூடான செய்திகள் 1

நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

(UTV|COLOMBO)-மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தள, மெதகம மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட பொலிஸ் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ன காரணத்திற்காக இவர்கள் துப்பாக்கியை வைத்திருந்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை என்று கூறியுள்ள பொலிஸார், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21, 45 மற்றும் 55 வயதுடையவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வெளிநாட்டிலுள்ளவர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா – தமிழ் விண்ணப்பம்

குண்டுதாக்குதல் வழக்கிலுள்ள நெளபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக 7,721 குற்றச்சாட்டுகள்!

வைத்தியர்களது ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு