சூடான செய்திகள் 1

ஜெனீவா சென்றதன் இரகசியம் என்ன?

(UTV|COLOMBO)-முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்க நான் ஜெனீவா சென்றாதாக பல குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினர் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றன,உண்மையில் நான் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்க ஜெனீவா செல்லவில்லை என்று மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று தெரிவித்தார்.

ஜெனீவா சென்று நேற்று (26.03.2018) காலை நாடு திரும்பிய அமைச்சர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நேற்று மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்தினார் இதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
  இலங்கை அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதியதகவே ஜெனீவா சென்று மாநாட்டில் கலந்து கொண்டேன். இந்நாட்டில் அப்போதும்தான் இப்போதும்தான் இடம் பெறும் வன்செயல்களை மறைப்பதற்கு ஒரு சிலர் என் மீது குற்றம் சுமத்துகின்றனர் அதை நான் வன்மையாக மறுக்கிறேன் முஸ்லிம்களுக்கு எதிரான வன்டமுறைகளை சர்வதேசமயப்படுத்தவே நான் அங்கு சென்றேன். கடந்த 2014 ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினால் அந்த அரசிலிருந்து வெளியேறினேன் அதே போன்று இந்த அரசிலும் கூட முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டால் இதிலிருந்தும் சற்றும் தயங்க மாட்டேன் நான் அரசியல் செய்தாலும் முஸ்லிம் சமுதாயத்திறகாகவே செய்கிறேன்.
 அவர்களின் நிழலிலேயே தொடர்ந்தும் பயணிப்பேன் அவர்களுக்கென்று ஒரு பிரச்சினை  வரும் பொழுது கை கட்டி வாய் பொத்தி பார்த்துக் கொண்டிருக்காமல் அவர்களுக்காக நான் எப்பொழுதும் குரல் எழுப்ப தயங்க மாட்டேன். இதை நான் இஸ்லாமியன் என்ற வகையில் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

தெற்காசியாவில் நிலையான சமாதானம் உருவாகுவதற்கு முரண்பாடுகளிற்கான தீர்வுகள் ; இன்றியமையாததாகும்- பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்

மது போதையில் வாகனம் செலுத்திய 4103 சாரதிகள் கைது