விளையாட்டு

ஸ்டீவ் ஸ்மித்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி?

(UTV|COLOMBO)-கிரிக்கட் பந்தினை சேதப்படுத்தியக் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், ஐ.பி.எல். தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அவர் பதவி விலகினால், ராஜஸ்தான் ரோய்ல்ஸ்கு, அஜின்க்யா ரஹானே தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

பந்தினை சேதப்படுத்தியக் குற்றத்துக்காக ஸ்டீவன் சுமித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கான தடையுடன், போட்டிப் பணத்தில் 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கெமரன் பென்க்ராஃப்டுக்கு போட்டிப் பணத்தில் 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது ஆரம்பக்கட்ட தண்டனை மாத்திரமே என்றும், அவர்கள் இருவரும் மேலும் பாரிய தண்டனைக்கு உட்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், தென்னாப்பிரிக்கா சென்று விசாரணைகளை நடத்தி வருகிறார்.

அவர் சுயாதீன ஆணைக்குழு ஒன்றிடம் தமது விசாரணை அறிக்கையை கையளிக்கும் போது, அதில் குறித்த இரண்டு பேருக்கும் வாழ்நாள் தடை விதிக்கும் வகையிலான பரிந்துரைகளையும் முன்வைப்பார் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இலங்கையினை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது

உலகின் முதல் 20 ஓட்டப்பந்தய வீரர்களில் யூபுன்

ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைவருக்கு கொரோனா