சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் தொடரும் கருணைமனு மற்றும் கையெழுத்து சேகரிப்பு

(UTV|KILINOCHCHI)-தாயை இழந்து தந்தையை பிரிந்து வாழும் கனிதரன்(வயது-13) மற்றும் சங்கீதா(வயது-11) ஆகிய இரு சிறுவர்களின் நிகழ் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தந்தையார் ஆகிய ஆயுள் தண்டனை கைதி திரு.ச.ஆனந்தசுதாகர் அவர்களின் பொது மன்னிப்பு கோரிய கருணை மனு கையெழுத்து போராட்டம் 21-03-2018 அன்றைய தினம் “தமிழ் இளையஞர் சமூகம்” விசுவமடு பகுதியில் ஆரம்பித்து.

தொடர்ந்து 21-03-2018 தொடக்கம் 25-03-2018 வரை கருணை மனு கையெழுத்து  நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சேகரித்து எதிர் வரும் 26-03-2018 திங்கள் கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி  மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்க்கும் செயற்த்திட்டம்  தமிழ் இளைஞர் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
அந்தவகையில் இன்று கிளிநொச்சி சந்தசாமி கோவில் முன்றலிலும்  டிப்போ சந்தியிலும் காலை பத்துமணி முதல் மாலை வரை நடைபெற்று வருகிறது .  இதனைத் தொடர்ந்து நாளை யாழ் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற உள்ளது இச்  செயற்த்திட்டத்தில் அனைத்து மனிதநேயம் கொண்டவர் களையும்  அழைத்து நிற்கின்றனர் தமிழ் இளைஞர் சமூகத்தினர்.
எஸ்.என்.நிபோஜன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தபாலில்

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்