வகைப்படுத்தப்படாத

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த வைத்தியர்

(UTV|INDIA)-சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர் லூக்கா மணிமாறன் தேகராஜூ (வயது 43). இவர் அங்கு பிசியோதெரபிஸ்டாக (உடலியக்க பயிற்சி நிபுணராக) உள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி இவரது பிசியோதெரபி கிளினிக்கிற்கு 18 வயதான ஒரு பெண் வந்தார். அவர் தனக்கு முதுகு வலியும், இடுப்பு வலியும் இருப்பதாக சொன்னார்.

அதைத் தொடர்ந்து லூக்கா மணிமாறன், அவருக்கு 15 நிமிடங்கள் உடலியக்க சிகிச்சை தேவைப்படுவதாக கூறி, தெரபி அறைக்கு அனுப்பினார். அங்குள்ள மசாஜ் படுக்கையில் படுக்குமாறு அவரை கூறினார். அவரும் அதற்கு இணங்கினார். அந்த அறையின் கதவு பாதியளவு மூடப்பட்டு, எஞ்சிய பகுதி திறந்திருந்தது.

அந்த நேரத்தில், அந்தப் பெண்ணுடன் வந்திருந்த நண்பர், வெளியே காத்திருந்தார்.

தெரபி அறைக்குள் சென்ற லூக்கா மணிமாறன், அந்தப் பெண்ணை மேலாடையை விலக்கிக்கொள்ளுமாறு கூறியதுடன், குட்டை பேண்ட்டை சற்றே தளர்த்துமாறும் அறிவுறுத்தினார். அந்தப்பெண்ணும் இதெல்லாம் சிகிச்சையின் ஒரு பகுதி என கருதி உடன்பட்டார். அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு உடலியக்க சிகிச்சை அளித்த அவர், தகாத முறையில் தொட்டு அத்துமீறினார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு, இதெல்லாம் சிகிச்சையின் ஒரு அங்கம்தானா என்பதில் சந்தேகம் எழுந்ததால் சகித்துக்கொண்டார்.

அந்தப் பெண்ணுடன் வந்திருந்தவர் உள்ளே எட்டிப்பார்த்தபோது, அவரிடம் லூக்கா மணிமாறன் பேசியதில் இருந்து சிகிச்சை முடிந்தது என்று அந்தப் பெண் புரிந்து கொண்டார். இதற்கிடையே அவர் அரை நிர்வாணமாக இருந்தது கண்டு அவரது நண்பர் அதிர்ச்சி அடைந்தார்.

கிளினிக்கில் இருந்து வெளியே சென்று இருவரும் பேசியபோது, பிசியோதெரபிஸ்ட் வரம்புமீறி பாலியல் தொல்லை செய்து இருப்பதை உணர்ந்தனர். இது குறித்து பொலிசில்  புகார் செய்தனர்.

அதன் பேரில் லூக்கா மணிமாறன் மீது பொலிசார்  வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின்போது, அவர் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 3 பிரம்படி தருமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வீடியோ கேம் போட்டியில் தோல்வி அடைந்ததால் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த சீன கப்பல்கள் நாடு திரும்பின

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்