வகைப்படுத்தப்படாத

19 ரஷ்யர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை

(UTV|RUSSIA)-19 ரஷ்யர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்தமை மற்றும் இணையவழித் தாக்குதல் என்பன தொடர்பில் குற்றம் சுமத்தி இந்தத் தடை நேற்று விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நீதித்துறை விசேட ஆலோசகர் ரொபர்ட் முல்லரினால் கடந்த மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானதாக கூறப்படும் நிறுவனம் ஒன்றின் தொழில் அதிபர் மற்றும் அவரது ஊழியர்கள் 13 பேரும் அதில் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன், ரஷ்ய அரசின் உளவுப் பிரிவு உட்பட ஐந்து ரஷ்ய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அழிவை ஏற்படுத்தும் இணையவழித் தாக்குதல் நடத்தியதாகவும், முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகளை அழிக்க இலக்கு வைத்ததாகவும் திறைசேரி செயலர் ஸ்டீவன் மனூஷின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவினால் நடத்தப்படும் மோசமான தாக்குதல்ளை இலக்கு வைத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது, வொஷிங்டனால், மொஸ்கோவிற்கு எதிராக ட்ரம்ப் நிவாகத்தினால் எடுக்கப்படும் பலமான நடவடிக்கை என விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை மூலம் குறித்த 19 பேருக்கும் அமெரிக்காவில் ஏதேனும் சொத்துகள் இருந்தால், அவை முடக்கப்படும் என்றும், அவர்களுடன் அமெரிக்கர்கள் தொழில் ரீதியான உறவு வைத்துக்கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Miley Cyrus’ sister Brandi shares flight turbulence funny moments

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம்

தேர்தல் இப்போதைக்கு இல்லை : வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சபை