சூடான செய்திகள் 1

ஆனமடுவில் எரிக்கப்பட்ட ஹோட்டல் புனரமைப்பு

(UTV|COLOMBO)-ஆனமடுவில் தீக்கிரையாக்கப்பட்ட வர்த்தக நிலையம் பொதுமக்களின் பங்களிப்போடு புனரமைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் ஆனமடுவ நகரில் விஷமிகளால் தீக்கரையாக்கப்பட்ட வர்த்தக நிலையம் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களால் புனரமைக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முஹமட் ரஹீம் என்ற வர்த்தகருக்குச் சொந்தமான ஹோட்டல் தீக்கரையாக்கப்பட்டிருந்தது.இதனை மூவின மக்களின் பங்களிப்போடு ஆனமடுவ வர்த்தக சங்கம் புனரமைத்துக் கொடுத்திருந்தது.

 

இது பற்றி கருத்து வெளியிட்ட சங்கைக்குரிய ஆனமடுவே குணானந்த தேரர், இது குறித்து சந்தோஷப்படுவதாகவும், பெருமையடைவதாகவும் தெரிவித்தார்.

ஒரே நாளில் ஹோட்டலைப் புனரமைத்து அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்க முடிந்துள்ளது.

இங்கு அரசியல், கட்சி பேதங்களின்றி சகல மக்களும் உதவி செய்து முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்கள் என தேரர் குறிப்பிட்டார்.

ஆனமடுவ ஐக்கிய வர்த்தகர் சங்கத்தின் தலைவர் தயான் அபேரத்ன உரையாற்றுகையில்,

 

பெரும்பாலும் சிங்கள வர்த்தகர்களைக் கொண்ட ஐக்கிய வர்த்தகர் சங்கம் முன்னின்று ஹோட்டலைப் புனரமைத்ததாகத் தெரிவித்தார்.

இந்த முயற்சியில் சகல இன மக்களும், இன, மத, குல பேதங்களை மறந்து செயற்பட்டமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என அவர் கூறினார்.

வர்த்தக நிலைய உரிமையாளர் முஹமட் ரஹீம் உரையாற்றுகையில்,

 

மீண்டும் வர்த்தக நிலையத்தை திறக்க முடிந்தமை குறித்து மிகவும் சந்தோஷப்படுவதாக குறிப்பிட்டார்.

தான் 30 வருடங்களாக சிங்கள மக்களுடன் வாழ்ந்து வருவதாகவும் சிறுகுழுவினரின் நாசகார செயல் குறித்து பெரிதும் கவலையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

பிரதேச சபை உறுப்பினர் ஹெரோயினுடன் கைது

போதைப்பொருள் ஒழிப்புக்கு மக்களிடம் இருந்து தகவல்களைப் பெற விசேட கருமபீடம்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு..