சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

(UTV|COLOMBO)-கண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

தனது கணவர் இனவாதத்தை தூண்டுமாறு எந்தவொரு பகிரங்க அறிவிப்பையும் செய்யவில்லை. கடைகள், பள்ளிவாயல் என்பவற்றை தீ வைக்குமாறு எனது கணவர் அறிவிக்கவும் இல்லை. பொலிஸார் தான் தனது கணவரை வருமாறு அழைப்பு விடுத்தார்.

தற்பொழுது அனைவரும் எனது கணவர் மீது பழியைப் போட்டுவிட்டு தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைப் பதிவு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு மக்கள் அவதானத்துடன் இருக்குமாரு பணிப்பு

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்-உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்து சேவை

நாலக சில்வா எதிர்வரும் ஜனவரி 02 வரையில் விளக்கமறியலில்