சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் மேலும் வலுவடையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டிருப்பதுடன் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மேகக்கூட்டங்களுடன் வானமும் மழையுடன் கூடிய வானிலையும் தொடருமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மேல், தென், தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் அவ்வேளைகளில் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையில் காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பாகங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரையிலும் காற்று வீசக்கூடும்.

 

தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை , மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக அப்பிரதேசங்களில் காற்றும் வீசக்கூடும். மின்னலிலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபடும் கைதிகளுக்கு தூக்குத்தண்டனை

சம்மாந்துறை திரையரங்கிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

பிரதமர் நோர்வே நோக்கி பயணமானார்…